30-வது ஆண்டு விழா மற்றும் மாநில, மாவட்டத் தலைவர்களுக்கு பாராட்டுவிழா - 08.07.2018

  

 

8.7.18. எழில் கொஞ்சும் காலை பொழுது...கோவைக்கே உரிய இதமான குளிர்ந்த காற்று... புலர்ந்தது புத்துணர்ச்சியுடன்.....

ரத்தினபுரி லட்சுமி நகர் களை கட்டியது. பட்டாசு சத்தம்..பேண்ட் வாத்திய முழக்கம்..ஆயிர வைசிய மகளிர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் மங்கள வாழ்த்துகளுடன்.... தமிழ்நாடு ஆயிர வைஸ்யர்களின் தன்னிகரற்ற தலைவர் திரு Dr. A. S. கணேசன் ஆயிர வைசிய சோழியர் பிரிவின் கடும் உழைப்பில் உருவாக்கிய பெருமைமிகு மண்டபத்தில் 30 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பிக்க கால் பதித்தார் தன் அன்பு மனைவி திருமதி Dr.அனுராதா கணேசனுடன்.

கோவை ரெசிடெண்சி ஹோட்டலில் மாவட்ட தலைவர் அரிமா.முத்து R. பழனிச்சாமி , சங்க தலைவர் திரு.முருகேசன் உள்ளிட்ட ஆயிர வைசிய பிரமுகர்கள் அளித்த வரவேற்பினை ஏற்றுக்கொண்டு,குறித்த நேரத்தில் மண்டபத்தை அடைந்த தலைவரை திருப்பூர் மாவட்ட தலைவர் சுப்ரமணிய சிவா, மாநில துணைத்தலைவர் திரு.பாண்டுரங்கன், சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள்,பெருந்திரளாக குழுமி இருந்த ஆயிர வைசியர்கள்,மகளிர் குழந்தைகள் அனைவரது ஆரவாரம் மிக்க வாழ்த்துக்கள் முழங்க,குத்துவிளக்கு ஏற்றி இறை வணக்கத்துடன் விழா ஆரம்பம் ஆகியது.

விழா நிகழ்ச்சிகளை மிக அழகாக தொகுத்து விழாவில் கலகலப்பாக பரிமாறி ஆர்வத்தை தூண்டினார் திரு.சுப்ரமணிய சிவா.

துவக்க உரை தலைவர் முருகேசன் ,வரவேற்பு உரை திரு.ராஜு,வாழ்த்துரை வழங்கிய திருவாளர்கள்,சுப்ரமணியன், மணிகண்டன்,சாமியப்பன்,ஆகியோர் சங்கம் உருவானது அதன் சிறப்பான கட்டுக்கோப்பு லட்சியம் பற்றி விவரித்தனர்